Monday, July 30, 2012

விழிப்பு

என் கனவுகளைப்  புரிந்து கொள்ளாத 
மனிதக் கூட்டங்களின் நடுவே 
புழுதித் தெருவழியே நடந்து கொண்டிருக்கும் 
ஓர் அநாமதேயம்
நான் என்பதை உணர்கிறேன் 

புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில் 
நான் நடக்கையில் 
நகரத்தின் மீது அமைதி இறங்கும் 
ஆனால்
நான் வழிதவறிப் போவதாக 
உணர்கிறேன் 

விரைவில்
நான் 
இல் பொருளான கிணற்று நீருக்கு ஏங்கும்  
வெய்யில் வாட்டிய சருகாகி விடுவேன்!

நான் யார் என்று 
எனக்கே தெரியவில்லை 

                                        ஆங்கில மூலம்: பார்வதி அரசநாயகம் 
                                        தென்னிலங்கைக் கவிதைகளில் இருந்து...

No comments:

Post a Comment